அப்பா பெயர் கணேசன்.அம்மா..கமல சுந்தரதேவி
தெருக்கோடி, பஸ் ஸ்டாண்ட், பால் கார்டு மாற்றுமிடம், சூப்பர் மார்க்கெட்... இப்படி எங்கே போனாலும் சரி, அங்கே எழுத்தாளர் ரமணி சந்திரனின் ரசிகைகளை பார்க்க முடியும்.
கணவர் பாலச்சந்திரன்! 'அஸ்ஸாம் டிரிப்யூன்’, 'மிட் டே’ உட்பட வட இந்திய பத்திரிகை பலவற்றுக்கு பிஸினஸ் ரெப்ரசென்டேட்டிவாக இருந்திருக்கிறார்.
அத்துமீறல் எல்லாம் இருக்காது என்பார் இவர்.
குடும்பச் சூழல், ஆண்-பெண் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளைக் கருவாகக் கொண்டு சுமார் 170 க்கும் மேலான குடும்பக் கதைகளை எழுதியுள்ள முன்னணி எழுத்தாளர் ரமணி சந்திரன்
அவர் தங்கை கணவர் 'ராணி’ பத்திரிகையின் ஆசிரியர் அ.மா.சாமி. முழுசாக அ.மாரிசாமி!
'' 'ராணி’யில் வரிசையா இரண்டு சிறுகதைகள் எழுதித்தர... இரண்டுமே பிரசுரமாயிடுச்சு.. அப்புறம்தான் இவருக்குக் கவலை வந்துட்டது.. சொந்தக்காரங்கனுதான் தான் எழுதினதையெல்லாம் பிரசுரிக்கிறார்களோனு சந்தேகம். அந்த சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள . ராணியில ஒரு சிறுகதைப் போட்டியின் போது தன் கதையின் தரத்தைச் சோதிக்கணும்னு அந்தக் கதையை லட்சுமி சீனிவாசன்னு இவருக்குத் தெரிந்த,பழக்கமான ஒரு பெண் பேர்ல எழுதினார். அந்தப் போட்டியில் லட்சுமி சீனிவாசனுக்குத்தான் முதல் பரிசு! அப்புறம்தான் தன்னம்பிக்கையோட நாவல்கள் எழுத ஆரம்பிச்சார்!
அவர் மாமாவிற்கு இது தெரிய வர,'அட...! நம்ம ரமணி பொண்ணா இதெல்லாம் எழுதினது’னு ஆச்சரியப்பட்டார்.
அந்த மாமா யார் தெரியுமா?
அவர் மாமாவிற்கு இது தெரிய வர,'அட...! நம்ம ரமணி பொண்ணா இதெல்லாம் எழுதினது’னு ஆச்சரியப்பட்டார்.
அந்த மாமா யார் தெரியுமா?
. சி.பாலசுப்பிரமணியம் என்கிற சி.பா.ஆதித்தனார்தான் ரமணிசந்திரனின் சொந்தத் தாய் மாமா!
ராணியிலும் தினத்தந்தியிலும் சூடுபிடித்த ரமணி சந்திரனின் எழுத்துக்கள், அப்புறம் குமுதம், கல்கி, கலைமகள் என்று எல்லா பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தன.
ராணியிலும் தினத்தந்தியிலும் சூடுபிடித்த ரமணி சந்திரனின் எழுத்துக்கள், அப்புறம் குமுதம், கல்கி, கலைமகள் என்று எல்லா பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தன.