Thursday, April 9, 2020

10 - ஜி.திலகவதி


குமாரசாமி பேட்டையில் (தர்மபுரி) வாழ்ந்து வந்த கோவிந்தசாமி ரெட்டியார் ஒரு பெண்ணைக் காதலித்தார்.அவரை மணக்க எதிர்ப்பு இருந்ததால், சொந்தங்களைத் துறந்து அப்பெண்ணை மணந்தார்.அவர் பெயர் சரஸ்வதி.

அத்தம்பதிகளுக்கு 1951ல் ஒரு மகள் பிறந்தாள்.அவரே திலகவதி ஆவார்.

திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார்.சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார் அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார்.

திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்.

  • காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP)
வேலூர்.
  • காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
  • காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG)
செங்கற்பட்டு
  • காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)
ஊர்க்காவல் படை (Homeguard)
இருப்புப்பாதை காவல்துறை (Railway Police)
  • காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP)
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு
பொருளாதார குற்றப்பிரிவு (2008 டிசம்பர் 19 முதல் 2010 ஜூன் 16 ஆம் நாள் வரை)
  • காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP)
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் (2010 ஜூன் 17ஆம் நாள் முதல் 2011 மார்ச் 31 ஆம் நாள் வரை)


காவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே.

2011 மார்ச் 31ஆம் நாள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கியத்தில் நாட்டம் கொண்ட இவர் 7 நாவல்களை எழுதியுள்ளார்.

"அலை புரளும் கரையோரம்" என்ற இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகடமி விருதினைப் பெற்றவர்.

36 நாவல்கள், 300க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.உலகச் சிறுகதைகளை, தமிழில் மொழிப்பெயர்ப்பதிலும் முனைப்புக் காட்டினார்.இவரது நாவல்கள் சமுக நோக்கினைக் கொண்டவை.பெண்கள் பிரச்னைகளைத் தொடுபவை.இவரது நாவலில் ஒன்றான "பத்தினிப் பெண்" திரைப்படமாகியுள்ளது. 

  1. வேர்கள் விழுதுகள்
  2. சமதர்மப் பெண்ணியம்
  3. மானுட மகத்துவங்கள்

நாவல்கள்

  1. கல்மரம்
  2. கனவைச் சூடிய நட்சத்திரம்
  3. ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  4. உனக்காகவா நான்
  5. கைக்குள் வானம்
  6. தீக்குக் கனல் தந்த தேவி
  7. திலகவதி நாவல்கள் (தொகுப்பு)

கவிதை

  1. அலை புரளும் கரையோரம்


இலக்கியச் சிந்தனை விருது, கலைமகள் குறுநாவல் போட்டி விருதுகளும் இவரது எழுத்துக்குக் கிடைத்துள்ளன.



No comments:

Post a Comment