Thursday, April 23, 2020

33 - சரஸ்வதி ராமநாத்


Jump to search
கவிஞர், எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,சமூக ஆரவலர் என பன்முனைச் செயல்பாடுகளைக் கொண்டவர் சரஸ்வதி ராமநாத்.இவர் தாராபுரத்தில் 1925 ஆம்  ஆண்டு செப்டெம்பெர் 7ஆம் நாள் பிறந்தார்.

இவரின் தந்தை தேச பக்தர்.காந்தியின் மீது அபிமானம் கொண்டவர்.ஆனால், அவரை சிறு வயதிலேயே இழந்தார்.ஆனால், தந்தை வைத்து சென்றிருந்த புத்தகங்கள் இவருக்கு வழிகாட்டியாய் அமைந்தது.

வசந்தம், பாரதமணி,சுதேசமித்திரன் இதழ்களில் சிறுகதைகளை எழுதினார்.

தமிழ் ,ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வித்வான் பட்டம் பெற்றார்,

கலைமகள், விகடன் இதழ்களில் பிரேம் சந்த், பங்கிம் சந்திரர் ஆகியோரின்
படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வந்தவற்றை வாசித்தார்.தானும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.

அப்போது தினமணி கதிர் ஆசிரியராய் இருந்த துமிலன் ,இவர் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார்.

ராமசந்திர தாகூர் குஜராத்தில் எழுதிய "ராஜ நர்த்தகி" நாவலை மொழிபெயர்த்தார்.அது தொடராக கதிரில் வந்தது.

காவேரி,சுதேசமித்திரன்,தீபம்,தாமரை,கலைமகள், இதழ்களில் இவர் மொழிபெயர்ப்பு சிறுகதைகள், நாவல்கள் வெளியாகின.

குழந்தை இலக்கியத்திலும் இவர் பங்களிப்பு உண்டு.புரட்சி வீரர் வரிசையில் பகத்சிங் பற்றிய வரலாற்றினை எழுதினார்.

பிரேம் சந்த் பற்றி பிரகாஷ் சந்திரகுப்தா எழுதிய நூலை தமிழுக்குக் கொண்டு வந்தார்.

பஞ்சாபில் அம்ரிதா ப்ரீதம் எழுதிய "ராதையுமில்லை ருக்மணிமில்லை"

ஸ்ரீலால் சுக்ல ஹிந்தியில் எழுதிய "தர்பாரி ராகம்"

ஜஸ்வந்த தல்லி மராத்தில் எழுதிய "மகாநதி"

கிருஷ்ணகட்வாணி சிந்தி மொழியில் எழுதிய "நந்தினி"

வங்கமொழியில் தாராசங்கர் பானர்ஜி எழுதிய "ஸப்தபதி"

என பலமொழி படைப்புகளைதமிழுக்குக் கொண்டு வந்த ஒரே எழுத்தாளர் இவர்.

உலகின் சிறந்த சிறுகதைகளின் ஒன்றான "டோபா டேக் சிங்"கைத் தமிழில் தந்தார்.

இவரின் "இனி வீடு திரும்ப வேண்டும்" என்ற சிறுகதைத் தொகுப்பும் பாரட்டப்பட வேண்டிய ஒன்று.
காஷ்மீர் முதல் கொங்கணி,பஞ்சாபி,ஒரியா,நேபாளி,மராத்தி ,டோக்ரி என பல மொழிப்பெயர்ப்பு தொகுப்பு நூல் இதுவாகும்.

பல பிரபல தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளை ஹிந்திக்குக் கொண்டு சென்றார்.நூற்றுக்கணக்கான தமிழ் படைப்புகளை ஹிந்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

சர்வதேச பெண்கள் ஆண்டினை யொட்டி இவர் "இந்தியப் பெண் எழுத்தாளர்களின்" சிறுகதைகள் நூல் இன்றளவும் முக்கியமானது.

கங்கை, யமுனை,கோதாவரி,காவிரி போன்ற நதிகளைப் பற்றி இவர் எழுதியுள்ள நூல்களும் முக்கியமானவையாக பாராட்டப்பட்டன.

ஏழு இந்திய நாடகங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்.அந்நூலுக்கு சாகித்ய அகடெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது  1993ல் கிடைத்தது.

இவரது படைப்புகள்

  • தர்பாரி ராகம்
  • ராஜநர்த்தகி
  • கூர்ஜரத்தின் செல்வன்
  • ஜெயசோமநாத்
  • தேவதாசி
  • புயலும் ஒளியும்
  • வீரசுதந்திரம்
  • சப்தபதி
  • கங்கை  
கிட்டத்தட்ட 30 வயதில் எழுதத் தொடங்கி 45  ஆண்டுகளுக்கு மேல் படைப்புலகில் இயங்கி வந்தவர்1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் நாள் அமரர் ஆனார். 

ஆனால் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது. படைப்பிலக்கியத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற குறை அவருக்குக் கடைசிவரை இருந்து வந்தது.

No comments:

Post a Comment