கிருத்திகா, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில் 1915ஆம் ஆண்டு பிறந்தவர்.இவர் இய்ற் பெயர் மதுரம்.
பம்பாயில் (இன்றைய மும்பை) படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவர்.திருப்பதிசாரம் எனும் ஊரைச் சேர்ந்த பூதலிங்கம் பிள்ளையை மண்னஹ்து கொண்டார்.
பூதலிங்கம், அரசாங்கத்தில் உருக்குத் துறையிலும்,நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றியவர்.
இவர்களின் மகள் மீனா, வேளாண்மை அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் மனைவி ஆவார்.
மதுரம் பூதலிங்கம், கிருத்திகா என்ற பெயரில், தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்."வாஸவேஸ்வரம்" எனும் புதினம் மூலம் தமிழ் நாவல் உலகில் தடம் பதித்தவர்.தமிழில் வெளியான படைப்புகளில் மிகச் சிறந்த ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது.
இவர் பின்னர் பல் அபுதினங்கள்,நாடகங்கள்,கட்டுரைகள் எழுதினார்.
தமிழில் கிருத்திகா என்ற புனைப்பெயரிலும், அனகிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.
இந்தியா முழுதும் பயணம் செய்து, இந்தியக் கோயில்கள், கலைகள் குறித்துக் கலைமகள் இதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சஸ்கிருதத்திலும் புலமிய உடையவர்.அழகாக மேடையில் பேசக்கூடியவர்.குழந்தைகளுக்காக ராமாயணம், மகாபாரதம்,பகாவதம் என பல ஆங்கில நூல்களை எழுதினார்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய வாஸவேஸ்வரம் என்ற புதினத்தை ஸ்ரீராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவர் 2009ஆம் ஆண்டு ஃபெப்ரூவரி 13ஆம் நாள் அமரர் ஆனார்.
இவர் எழுதிய புதினங்கள்-
புகை நடுவினில்
சத்யமேவ
பொன்கூண்டு
வாஸவேஸ்வரம்
தர்ம ஷேத்ரே
புதிய கோணங்கி
நேற்றிருந்தோம்
குறுநாவல்கள்-
----------------------
நாடகங்கள்-----
----------------------
- மனதிலே ஒரு மறு
- மா ஜானகி
No comments:
Post a Comment