Saturday, April 18, 2020

25- குயிலி ராஜேஸ்வரி
















 தமிழகத்தின் பெண் சிறுகதை, புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார்.

இவர் ஒரு கலை விமர்சகர்.பல பிரபலங்களைப் பேட்டிக் கண்டுள்ளார்.

இவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. பெரியவர்களுக்காக 25ற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ளார். தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளிலும் இவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில்  "ஆன்பு சுடும்" எனும் இவர் நாவல் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய "உணர்ந்த நெஞ்சம்", "தெய்வம் சிரித்தது"  ஆகிய புதினங்கள் குறிப்பிட வேண்டியவை.
நாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும்.
புதுச்சேரி  நூலகங்களில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இவை வைக்கப்பட்டுள்ளன.
நேஷனல் புக் டிரஸ்டுக்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். 

No comments:

Post a Comment