Saturday, April 18, 2020

24 - வித்யா சுப்பிரமணியம்



1957 ஆம் ஆண்டு மைலாப்பூரில் பிறந்தவர் உஷா என்னும்  கற்பகவல்லி.


சுப்பிரமனியம் என்பவரை மணந்தார்.உஷா சுப்பிரமணியம் என்ற பெயரில் எழுதத்தொடங்குகையில், தமிழில் ஏற்கனவே உஷா சுப்பிரமனியம் என்ற எழுத்தாளர் இருந்ததால்...தன் மகள் வித்யாவின் பெயருடன் சுப்பிரமணியம் பெயரை இணைத்து வித்யா சுப்பிரமணியம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
தமிழக அரசு ஊழியராகப் பணியாற்றிபடியே எழுதியதோடு மட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் ஆர்வத்துடன் இருந்தார்.இவர் ஓவியங்கள் சில தீபாவளி மலர்களில் இடம் பெற்றுள்ளன.

இவர் 1983 முதல் எழுதி வருகிறார்,

முதல் கோணல்...இது இவர் முதல் கதையின் தலைப்பு.அதுவும் நெடுங்கதை.மங்கையர்மலரில் வெளியானது

இதுவரை இவர் நூற்றுக்கணக்கான சிறுகதைகளும்..தொடர்களும் எழுதியிருக்கிறார்.


இவரது ஆன்மீகத் தொடர்களும், பயணக்கட்டுரைகளும் நூலாக வெளி வந்துள்ளன.

இதுவரை பெற்ற விருதுகள்
--------------------------------------------

"வனத்தில் ஒரு மான்" புதினத்திற்கு தமிழக அரசு விருது

ஆகாயம் அருகில் என்ற புதினத்திற்கு ஸ்டேட் பேங்க் விருது

"தென்னங்காற்று" புதினத்திற்கு அனந்தாச்சாரி விருது

"கண்ணிலே அன்பிருந்தால்"  புதினத்திற்கு  கோவை லில்லி தெய்வசிகாமணி விருது

இருமுறை இவரது கதைகளுக்கு "ஈலக்கியச்சிந்தனை" விருது


கலைமகள்  இதழ் 80ஆம் ஆண்டுவிழாவில் கௌரவிக்கப்பட்டார்.

இவர் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலத்தில், "பியாண்ட் தி பிராண்டியர்" என்ற பெயரில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .

இவரது இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "தமிழ் புனைநூல்களின் மலிவுப்பதிப்புத் தொகுப்பு" (Antholigy of Tamil Pulp fiction) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூலில் இடம் பெற்றன.

இவரது "உப்புக் கணக்கு"என்ற புதினம் உப்பு சத்தியாகிரகத்தை மையமாகக் கொண்டது.ராஜாஜி உள்ளிட்ட நிஜமாந்தர்களுடன் கற்பனை மாந்தர்களும் இடம் பெற்ற நூல் இது.

புற்றுநோயும் அது பரவுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் சிகரெட் பழக்கத்தையும் மிகத் தீவிரமாக எதிர்ப்பவர் இவர்.மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அதுபற்றி நிறைய எழுதி வருகிறார்."கண்ணாமூச்சி" எனும் சுயசரிதை குறிப்பிடத்தக்கது.

"உங்கள் உதட்டில் உட்காரும் அந்தச் சிறு நெருப்பு ஒருநாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு அதை ஒதுக்கித் தள்ளுங்கள்"என தன் கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.

இவரது புதினங்கள் சில-

ஆசைமுகம் மறந்தாயோ

வந்தாள்..சென்றாள்..வென்றாள்

கனவே கலையாதே

ஆகாயம் உள்ளவரை

ஆசையே அலைபோல

அந்த  மாலை மயக்கம்

ராமர் பதம்

பரசுராமன்

படைப்பு என்பது கண்ணியத்துடன்,கருத்துடனும் இருப்பதோடு படிப்பவர்கள் சிந்தனையில் ஒரு சிறு மாறுதலையாவது நிகழ்த்த வேண்டும் என்று கொள்கை பிடிப்போடு எழுதி வருகிறார்.



No comments:

Post a Comment