Saturday, April 4, 2020

5 - ராஜம் கிருஷ்ணன்



1925ஆம் ஆண்டு தமிழகத்தில் முசிறியில் பிறந்தவர் இவர்.

பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாதவர்.இவரது 15ஆம் வயதிலேயே கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.திருமணத்திற்குப் பின் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்.மின்பொறியாளராய் இருந்த கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து,பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவர் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பொதுவாக இவர் தனது படைப்புக்காகத்தேர்ந்தெடுக்கும் களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களுடன் நெருங்கிப் பழகி உண்மை நிலைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டு,அந்த உணர்வையும்,அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தன் எழுத்து வழியாகக் கொண்டு வந்தவர்.

1970ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்கள் நிலையை நேரடியாகக் கண்டு, அந்த உணர்வினையும் தனது "கரிப்பு மணல்கள்' என்ற நாவல் மூலம் எழுதினார்.

பீகார் கொள்ளைக் கூட்டத் தலைவன் "டாகுமான்ஸி"யை சந்தித்தவர், அதன் விளைவாக "முள்ளும் மலர்ந்தது" என்ற நாவலை எழுதினார்.

பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதினார்.இவரின் 80க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன.59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப் பெறுகின்றன.

2009ஆம் ஆண்டு இவரது நூல்கள் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டன.அதற்காக 3 லட்சம் ரூபாய் இவருக்கு வழங்கப்பட்டது.உயிருடன் இருக்கையிலேயே அரசுடமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே!

1950ல் அமெரிக்கப் பத்திரிகையான "Newyork Herald Tribunal" என்ற பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டியினை அறிவித்தது.அப்போட்டிக்கு தனது "Needle and Sense" எனும் தன் சிறுகதையை அனுப்பி வைத்தார் இவர்.அதற்கு பரிசு கிடத்தது.அதையே "ஊசியும் உணர்வும்" என தமிழில் மொழி பெயர்த்தார்.

சாதாரணமாக எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் தொடர் எழுதுகையில்..அத்தியாயம்..அத்தியாயங்களாக எழுதித் தருவர்.ஆனால் இவரோ முழுத் தொடரையும் மொத்தமாக எழுதித் தந்து விடுவாராம்.

இவருக்கு குழந்தைகள் இல்லை.முதுமையில் வறுமையில் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்.உடல்நலக் குறைவு..பக்கவாதத்தால் நடக்கமுடியாத நிலை.சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 2014ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20ஆம் நாள் அமரர் ஆனார்.தனது உடலை, தனக்கு சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா  மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி விருப்பம் தெரிவித்திருந்தார்.

1953ல் இவரது "பெண் குரல்" நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்தது.

1973ல் "வேருக்கு நீர்" என்ற நாவலுக்கு சாகித்திய அகடமி விருது

1975ல் சோவியத் லாண்ட் விருது

1991ல் திரு வி க விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

சேற்றில் மனிதர்கள் நாவலுக்கு பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை விருது

பாதையில் பதிந்த அடிகள் ..நூல் ,பொதுவுடைமை இயக்கியபோராளி மணியம்மை குறித்த நூலாகும்.

காலம்தோறும் பெண், காலம் தோறும் பெண்மை,யாதுமாகி நின்றாய்,இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை ஆகியவை பெண்ணியம் குறித்து இவர் எழுதியவை

டாக்டர் ரங்காச்சாரி,பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி,சத்திய தரிசனம் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

ஆகியவை தவிர்த்து "காலம்" என்று தன் வாழ்க்கைக் குறிப்பினையும் எழுதியுள்ளார்.

இவரது நாவல்களில் சில..

குறிஞ்சித்தேன்,கரிப்பு மணிகள்,அமுதமாகி வருக,முள்ளும் மலர்ந்தது,கூடுகள்,மலர்கள் .,

No comments:

Post a Comment