Monday, April 13, 2020

17 - அதிகம் வெளிச்சத்திற்கு வராதவர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பெண் எழுத்தாளர்கள் சாதனைகம் பல புரிந்துள்ளார்கள்

பலர் வெளிச்சத்துக்கு வராதவர்கள்.சிலரைப் பற்றித் தெரிகிறது.அதுவும் சிறிதளவே..அவர்களில் சிலரைப் பற்றியும்..அவரது சாதனைகளையும் பார்ப்போம்.

கிருபை சத்தியநாதன்-

1893ல் இவர் எழுதிய "கமலம்- ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்" எனும் புதினம் முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1896ல் தமிழாயிற்று.எனினும் இது ஒரு தமிழ்ப்பெண்ணின் வரலாற்றினைப் பேசுவதாலும்,1896ல் தமிழானதாலும் பெண் எழுத்தாளர்கள் படைப்பில் இதுவே முதல் நாவல் எனப்படுகிறது.

விசாலாட்சி அம்மாள்-

தமிழில் முதன் முதலாக பத்திரிகை ஆசிரியராகவும், நாவலாசிரியராகவும் விளங்கியவர் விசாலாட்சி அம்மாள்.இவர் தனது பதினெட்டாம் வயதிலேயே "லோகோபகாரி" எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக 1902ல் சேர்ந்து பணியாற்றினார்.பின், அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் ஆனார்.அதன்பின்னர்  "ஹிதகாரினி" என்ற மாத ஏட்டினை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.இவரால் எழுதப்பட்ட நாவல்கள் 30க்கும் மேல்.42 வயதிலேயே மரணம் அடைந்த இவர்..இளம் வயதிலேயெ புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியராகவும், நூலாசிரியராகவும் விளங்கினார்.

எஸ்.ராஜாம்பாள் -

திண்ணைப் பள்ளியில் தமிழ் கற்று, வேற்று மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜாம்பாள் ,1931ல் "சுந்திரவேணி" என்ற புதினம் எழுதினார்.

மீனாட்சி சுந்தராம்பாள் -

1912ல் "ஜெயசீலன்" எனும் புதினத்தை எழுதினார்.நடைமுறை வாழ்க்கையினைச் சித்தரிக்க தன படைப்பாளர ஆனதாகச் சொன்ன இவர், எதார்த்தம்,தெளிந்த இலக்கியம் என அந்நாளிலேயே இனம் கண்டிருப்பது வியப்பையே ஏற்படுத்துகிறது

சாரநாயகி அம்மாள் -

இவர் விதவைத் திருமணத்தை ஆதரித்து இவர் எழுதிய புதினம் "நித்ய கல்யாணி"

டி பி ராஜலட்சுமி -

புகழ்பெற்ற நடிகை டி பி ராஜலட்சுமி.அவர் "கமலவல்லி" என்று ஒரு புதினம் எழுதினார்."கமலவல்லி ,கண்ணப்பனைக் காதலிக்கிறாள்.ஆனால், அவளது வளர்ப்புப் பெற்றோர்,அவளை 5000ரூபாய்க்கு சந்தரசேகரன் என்பவருக்கு விற்று விடுகின்றனர்.மணமும் முடிகிறது.பின் உண்மை அறிந்த சந்திரசேகர் மனைவியை கண்ணப்பனுடன் சேர்த்து வைக்கின்றான்.

இன்று இது சாதாரண நிகழ்வாய் இருக்கலாம்.ஆனால் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம்.

சகுந்தலா ராஜன் -

அதிகம் பேசப்படாத இவரும் மாற்று சிந்தனையாளர் எனலாம்.தனது "வனிதாலயத்தில்" மனைவியுடன்..கணவன் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்

பாலாம்மாள் -

இவர் தனது :மனோகரி" என்ற புதினத்தில், வீட்டு வேலை செய்பவள் தனக்கு அடிமை என்ற எண்ணத்துடன் ,குடும்ப நிர்வாகத்தில் ஒரு பெண்ணுக்கு அளிக்க வேண்டிய அதிகாரம், சுதந்திரம்,சமத்துவம் இவற்றை அளிக்கத் தவறும் கணவன்"தன் குடும்பம் நன்கு நடக்கும் என்பதை எதிர்பார்க்கமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்துகிறார்.

No comments:

Post a Comment