Sunday, April 5, 2020

6 - சரோஜா ராமமூர்த்தி



1930 களின் இறுதிஆண்டுகளில் எழுத ஆரம்பித்தவர் சரோஜா ராமமூர்த்தி ஆவார்.

தாயில்லாப் பெண்ணானாலும், தன் பாட்டியால் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டார்

16 வயதில் எழுத ஆரம்பித்தார். இவர்.தன் ஆழ்மனதில் இருந்த கேள்விகளை கதையாக்கினார்.

தான் கதை எழுவது மூலம் பெற்ற நண்பர் ராமமூர்த்தி என்பவரை இவர் காதலித்தார்.அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால்,தன் மாமாவுடன் பம்பாய் (இன்றைய மும்பை) வந்தார்,அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.பின்னர். அனைவரையும் எதிர்த்துக் கொண்டு ராமமூர்த்தியை மணந்தார்.ராமமூர்த்தியும் ஒரு எழுத்தாளர் ஆவார்.

1956ல் இவர் எழுதிய "இருளும் ஒளியும்" நாவல் மிகவும் வித்தியாசமான பெண் பாத்திரம் கொண்ட நாவலாகும்.

"பனித்துளி" என்ற நாவல் இவருக்கு பெரும் பாராட்டுதல்களைப் பெற்று தந்தது.

எம் ஜி ஆர், பத்மினி நடித்த விக்கிரமாதித்தன் திரைப்படத்தின் திரைக்கதையின் ஒரு பகுதி இவர் எழுதியதே!

இவருக்கு இரண்டு மகன்கள்.ரவீந்திரன், ஜெயபாரதி

ஜெயபாரதி திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் ஆவார்.

சரோஜா ராமமூர்த்தின் அரசுடமை ஆக்கப்பட்ட சில நூல்கள்...

அவள் விழித்திருந்தாள்,இருளும் ஒளியும்,சிறுகதைகள் தொகுப்பு,நவராத்திரிப் பரிசு,பனித்துளி,முத்துச் சிப்பி

1991ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment