Saturday, April 11, 2020

14 - இந்துமதி

20th february 1948ல் பிறந்தவர் இந்துமதி. இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர்.

சீரடி சாய்பாபாவிப் பகதையான இவர் பதினாறு வயதிலேயே எழுதத் தொடங்கினார். ஆனந்த விகடன்,குமுதம்,கல்கி ஆகிய பத்திரிகைகளில் அதிகம் எழுதினார்.

இவரும் சிவசங்கையும் இணைந்து எழுதிய "இரண்டு பேர்" எனும் நாவல் சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பேசப்பட்டது.

கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் இவர் எழுதி  வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.

இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர்  "கருப்பு ரோஜா" என்ற படத்தைத் தயாரித்து திரைப்படத் துறையிலும் கால் பதித்தவர்..

அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.
இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில்"Surrendered Dreams"என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. 
இக்கதையில் வரும் ருக்மணி மற்றும் விஸ்வம் கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவை.

குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே!

மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் தான் பார்த்த, தான் கேட்ட, தன்னை பாதித்த சம்பவங்கள்தான் தன் கதைக்கருக்கள் என்கிறார். மனதை பாதிக்காத அல்லது நெகிழ வைக்காத எதுவும் கதையாவதில்லை. வெறும் கற்பனைக் கதைகள் எழுதுவதில்  தனக்கு உடன்பாடில்லை. தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சம்பவங்கள், தான் பழகிய மனிதர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் என அவற்றைக் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுவதாகவும் தெரிவிக்கின்றார்.

‘இதை எழுது எழுது’ என மனசு சொல்ல வேண்டும். அப்படி எழுதும்போதுதான் ஆத்மார்த்தமான எழுத்து வெளிவரும். உதாரணத்திற்கு...

பொற்கோவில் பிரச்னை வந்த போது, ஒரு சீக்கிய பையனை சிலர் துரத்திக்கொண்டு வந்து இருக்கிறார்கள். அந்த வழியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆட்டோவில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அவன் இவரிடம் உதவிக்கேட்டிருக்கிறான். துரத்தி வந்தவர்கள் அருகில் வரவே பயத்தால் அந்த பெண்ணால் அந்த சிறுவனுக்கு உதவ முடியவில்லை. அந்த செய்தியை நாளிதழில் படித்ததில் இருந்து நான்கு நாட்கள்..அந்த பையன் தன்னிடம் கெஞ்சுவது போலே இருந்தது. அந்த பாதிப்பில் தான் இவர் எழுதிய ‘குருத்து’ எனும் கதை.

இவர் எழுதிய மற்ற சில நாவல்கள்

விரலோடு வீணை

அசோகவனம்

ஆரண்யவாசம்

மலர்களிலே அவள் மல்லிகை

No comments:

Post a Comment