Thursday, April 23, 2020

32- கு ப சேது அம்மாள்



1908ஆம் ஆண்டு பிறந்தவர் கு ப சேது அம்மாள்.புகழ் பெற்ற எழுத்தாளர் கு ப ராஜகோபாலின் தங்கை.




தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடி எனலாம்.

மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கு ப ரா விற்கு கண்புரை ஏற்பட, அப்போது அவருக்கு உதவி , அவர் சொல்லச் சொல்ல எழுதித் தந்தவர் சேது அம்மாள்.வெறும் எழுத்தராக மட்டும் தங்கை சேது அம்மாளை கு.ப.ரா. நிறுத்திவிடவில்லை. தங்கையின் அறிவு தாகத்தையும் இலக்கிய ஆவலையும் தூண்டிவிட்டார்; படிக்க வலியுறுத்தினார்.  சேது அம்மாள்தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.
இப்படி அண்ணனுடைய கற்பனைகளுக்கு எழுத்துருவம் கொடுத்துவந்த அவர், தானும் இலக்கிய உலகில் புகுந்தார். தனியாகச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அவரது முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’, 1935-ம் ஆண்டில் ‘காந்தி’ என்ற இதழில் வெளியானது.

தொடர்ந்து மணிக்கொடி, பாரதி, கல்கி, குமுதம், ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில்  சிறுகதைகளை எழுதினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி உதயம்’, 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. அது கு.ப. ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
அதன் பிறகு ‘தெய்வத்தின் பரிசு’, ‘வீர வனிதை’, ‘உயிரின் அழைப்பு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை சேது அம்மாள் வெளியிட்டிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ‘1940-களிலேயே சிறுகதையின் வடிவம், நுணுக்கங்கள் சார்ந்த நல்ல புரிதலைக் கொண்டிருந்த எழுத்தாளர்’ என்று சேது அம்மாளை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
இலக்கிய உலகின் வேறு பல வடிவங்களிலும்  எழுதியிருக்கிறார் என்ற போதிலும், ஆரம்பகாலச் சிறுகதை வடிவத்தில் அவருடைய முயற்சிகளும், ஆரம்பகாலப் பெண் எழுத்தாளராக அவருடைய பங்கும் மிக முக்கியமானவை.

 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.
இவர் எழுதிய புதினங்கள்
  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • அம்பிகா
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
சிறுகதைத் தொகுப்புகள்


  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
  • ஒளி உதயம்

மற்றவை


  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)


.






கு. ப. சேது அம்மாள் (1908 - நவம்பர் 52002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் தங்கை.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • அம்பிகா
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்

சிறுகதைத் தொகுதிகள்[தொகு]

  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
  • ஒளி உதயம்

அபுனைவு நூல்கள்[தொகு]

  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

No comments:

Post a Comment