Tuesday, April 14, 2020

19 - குகப்பிரியை



1946ல் பதிவு செய்யப்பட்டு சக்தி காரியாலயத்திலிருந்து வெளிவந்த மங்கை எனும் பெண்கள் பத்திரிகியயின் ஆசிரியராக நான்கு ஆண்டுகள் பணி புரிந்தவர் குகப்பிரியை.

வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இயற்பெயர் லட்சுமி.

இவர் இதழ் ஆசிரியர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட.கதை,கட்டுரை,மொழிபெயர்ப்பு என பல துறைகளிலும் ஈடுபட்ட்வர.

ஆண்-பெண் சமத்துவம்,பெண்களுக்கு சொத்துரிமைத் ட்ஹேவை,பொருளாதார சுதந்திரம் தேவை எனப் பெண்ணியத்திற்கு நெருக்கமான கருத்துகள் பலவற்றைக் கட்டுரைகள் வடிவத்தில் பரவலாக வெளியிட்டு  மங்கையை முக்கியமான இதழாகக் கொண்டு வந்தவர்.  

செய்யும் தொழில்களிலேயெ சிறந்தது எழுதும் தொழில்தான் எனும் கொள்கையை உடையவராய்த் திகழ்ந்தார்.

ஆனந்த விகடன்,கலைமகள் உட்பட பல பத்திரிகைகளில் நாவல், சிறுகதைகளுக்காக பரிசுகளை வென்றவர்.

"பச்சை மோதிரம்" என்ற கதை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று

காந்தியத்தின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் தன் வாழ்நாளில் இறுதிவரை கதராடையை அணிந்து வந்தவர்.

பணத்தாசைப் பிடித்த மாப்பிள்ளையைப் பற்றி இவர் எழுதிய " சந்திரிகா" என்ற புதினம் பாராட்டுதல்களைப் பெற்றது.

இவரின் மற்ற புதினங்கள் சில  ..

இருள்

ஒலி

திப்பு சுல்தான்

மார்த்தாண்ட வர்மன்

தேவகி முதலிய கதைகள்


No comments:

Post a Comment