Saturday, April 11, 2020

15 - கமலா சடகோபன்




கமலா சடகோபன், சித்ராலயா கோபுவின் மனியவியாவார், 

இவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய "ஜகன்மோகனி' பத்திரிகையில் துணை ஆசிரியராக தன்னுடைய எழுத்துப் பணியைத் தொடங்கினார்.

இவரை "எழுத்துலகில் தன் வாரிசு" என்பாராம் வை,மு.

பின்னர் மங்கையர் மலர் இதழில் நீண்டகாலம் இணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 

 சுதேசமித்திரன், கலைமகள், விஜயவிகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

இவரது 'படிகள்' என்ற புதினத்திற்காக 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினைப் பெற்றார்.

இவரது "கதவு" என்ற புதினம்..கலைமகள் ,நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் அனைத்து நீதிபதிகளின் ஒருமித்த தேர்வில் பரிசினை வென்றது.அன்றைய முதல்வர் அமரர் எம் ஜி ராமசந்திரன் கைகளில் அப்பரிசினைப் பெற்றார். 


"கதவு', "படிகள்', "அகல் விளக்குகள்', "சுவர்', "கிராமத்துப் பறவை' உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஏராளமான சிறு கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவருடைய பல நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்துள்ளன. .
இவருடயை பல நாவல்கள் மாணவர்களின் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேரு பிரதமராக இருந்தபோது சென்னை ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, கொல்கத்தாவில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர். 


புதினங்கள்

  • கதவு
  • படிகள்
  • அகல் விளக்குகள்
  • சுவர்
  • கிராமத்துப் பறவை
  • ஊமை உறவுகள்
  • என் இனிய மந்திரகோலே
  • என் உயிர் தோழி
  • கல்யாண கைதி
  • கரை தொடாத அலை
  • குயில் தோட்டம்
  • மாலை சூடும் வேலை
  • மேகலாபரணம்
  • மோகன புன்னகை
  • சொல்லாமலே சங்கீதா
  • உனக்கே உயிரானேன்
  • உறங்காத உள்ளம்
  • வாரிசு

அபுனைவு

  • ஒரு பறவையின் சரணாலயம்

No comments:

Post a Comment