Sunday, April 12, 2020

16 - ருக்மணி பார்த்தசாரதி

எழுத்தாளர் சூடாமணியின் சகோதரி இவர்.

சில தகுதியான்வர்கள் அடைய வேண்டிய உச்சியை அவர்களால் அடைய முடிவதில்லை.அதற்கான காரணங்கள் பலவாயினும்...முக்கியக் காரணமாய் அமைவது..இப்படிப்பட்டவர்களுக்கு தன்னை எப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது என்பது தெரியவில்லை என்பதுதான்.

ஆம்..அப்படிப்பட்டவர்களில் ருக்மணி பார்த்தசாரதியும் ஒருவர்.

அதிகம் புகழ் பெறாத..ஆனால் பெற்றிருக்க வேண்டிய தகுதியினை உடையவர்.

இவரது, :"மகிழ்ச்சிகள் தொடரட்டும்" என்ற சிறுகதத் தொகுப்பிற்கு"லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு கிடைத்தது.

இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.

கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு

கலைமகள் மதுரவல்லி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு

விபுலா என்ற தெலுங்கு இதழ் நடத்திய பன்மொழி சிறுகதைப் போட்டியில் தமிழ்ப் பிரிவிற்கான பரிசு

இலக்கியச் சிந்தனை விருது

என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனது சகோதரி சூடாமணியினைப் போல ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ளார்.இவர் எழுதிய ஆங்கிலக் கதை ஒன்றின் தமிழாக்கம் இந்தியில் நேஷனல் நெட் வொர்க்கில் "கஷ்மகஷ்"  ஒலி/ஒளி பரப்பானது.

இவர் கதைகளில் தென்படும் இயற்கை வர்ணனைகளில் வித்தியாசமாக இருப்பது இவர் திறமையினை நமக்கு சொல்லக்கூடியது

தனது 71ஆம் வயதில் இயற்கை எய்தினார்  

No comments:

Post a Comment