Monday, April 20, 2020

30 - அம்பை



1944ஆம் ஆண்டு பிறந்தவர் சி.எஸ்.லட்சுமி. இவர் அம்பை எனும் பெயரில் எழுத ஆரம்பித்தார்.

1976ல் விஷ்ணு என்பவரை மணந்தார். 1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ஆங்கிலம்இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். 

தனது சிறுவயதிலிருந்தே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார்.தனது பதினாறாவது வயதிலேயே, அப்போது  கலைமகள் பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "கண்ணன்" என்ற குழந்தைப் பத்திரிகை நடத்திய நாவல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்."நந்திமலைச் சாரலில்" என்ற அந்நாவல், இளம் வயதினருக்கான துப்பறியும் சாகசங்கள் கொண்டதாகும்.

அடுத்து இவர் எழுதிய "ஞானம்" என்ற சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்தது.

இவர் எழுதிய "அந்திமாலை" என்ற புதினம், கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசினை வென்றது.

இவரை பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி எனலாம்.பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமக தொட்டுச் சென்றவர்.

தனது படிப்புகளீல், உறவு,காதல்,திருமணம், அரசியல்,இசை என பல பரிமாணங்களைத் தொட்டவர். சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களின் வாழ்க்கையை மிக இயல்பாகப் படைத்தவர். 



இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.

சிறகுகள் முறியும், மஞ்சள் மீன், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,காட்டில் ஒரு மான் ஆகிய இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது

ஆற்றைக்கடத்தல்,முடிவில்லா உரையாடல், பயணங்கள் ஆகிய மூன்று நாடகங்களை எழுதியுள்ளார்.

. ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

இவரது படைப்புகள்

  • அந்தி மாலை (நாவல்)
  • சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்)
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • ஒரு கருப்பு சிலந்தியுடன் ஒரு இர்வௌ
  • சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)
ஆங்கில மொழிபெயர்ப்பில்
  • A Purple Sea (1992),
  • In a Forest
  • A Deer (2006)
  • The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்)
கனடாவில் இலக்கியவட்டம் எனும் அமியப்பு இவருக்கு வாழ்நாள் விருதினை அளித்து கௌரவித்துள்ளது.

No comments:

Post a Comment